Naveen's

Friday, October 25, 2013

பசலை



பசலை






மூணு நாள் பார்க்காதது மூணு யுகம் போல இருந்துதினு,முப்பது மைல் தூரத்தை மூணு மூச்சிலே தாண்டி வந்து, பேய் மழையிலே எனக்கு கம்மாயிலே மீன் பிடிச்சுதாறுமாய்யா எனக்கேட்டதுக்கு, தூண்டி போட்டா மீன் சிக்க நேரேமாகுமுணு, பொங்கி நிண்ண கம்மாயிலே முங்கிக் கெழுத்தி மீனு புடிச்சுத் தந்தீரே.திருட்டு மாங்கா தின்னணுமுணு நாங்க் கேட்டதுக்கு பூவே பூக்காத மாமரத்துலேறி எனக்காக மாங்கா பறிச்சு வந்தவரே, ஊருசனமெல்லாம் பயப்படும் எல்லைகருப்பராயன் கோயிலிலே நா கேட்டேனு உச்சி பூசை செஞ்சவரே, மழையப் பொழியிர வானத்த பாத்துகிட்டே இருக்கணும்னு கேட்டதுக்கு, காது கேக்கதவன ரெட்ட மாட்டு வண்டி பூட்ட சொல்லி ஏழு பால்லாங்கு எந்தோளோடு தோள் சேர்த்து வானத்த நா பார்க்கையிலே என்னை கண்ணாலேயே முழிங்கீட்டுப் போய்டீரே, என் சமஞ்ச தேகம் நீர் பார்த்த பார்வையிலே எரியுதையா அதுக்கு நா என்ன சமாதானஞ் சொல்ல......

 நன்றி வெளங்காதவன்




naveen

Thursday, September 5, 2013

அப்புசாமி மகனும், ஆறுமுகன் மகனும்.....



அப்புசாமி மகனும், ஆறுமுகன் மகனும் டவுசர் போடாததற்க்கு முன்பிருந்தே நண்பர்கள்

இருவரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதி...  


ஆ.ம  : "அலோ"





அ.ம   : "அலோ"யாருங்க் ?

 


ஆ.ம  : அண்ணா,  எப்புடியிருக்ரீங்க்?

அ.ம  : அட, நீயா..? நல்லாருக்கிறானப்பா...நீ எப்புடி இருக்கற.?

ஆ.ம  : ஏதோ போகுதுணா...அய்யன்,அம்மா எல்லாம் சாவுக்கியங்க்ளா?

அ.ம  :  அல்லாரும் சவுக்கியம்டா, இப்பதான் பாலு ஊத்திபோட்டு வந்து,சாணி அள்ளி போட்டு போட்டு நின்ன ,உன்ற போனு வந்துடுச்சு.

ஆ.ம  :  நானும் இப்பதாணுங்க் மாட்டாயெல்லாம் புடுச்சு சாலைக்குள்ள கட்டிப்போட்டு,சேரி அண்ணங்க் கூட பேசி போடலாமுணு பண்ணுணங்க்.

அ.ம  : அப்பறம் வேற என்ன சமாசாரம்

ஆ.ம : அது ஏனோ நம்ம மாட்டுக்கு,தெக்கால தோப்பு காளையோட சேத்துனா செணை நீக்கமாட்டீதுங்க.விசாலக்கெழமை புள்ளாச்சிலிருந்து டாக்டரு வந்தார்ருனா எனக்கு ஒரு ரிங் உடுங்க, ஊசி போட்டுபோடலாமுங்க.

அ.ம  : சேரியப்போவ், அப்றம் அவன்கீனு போனு பண்ணுனான?

ஆ.ம : யாருங்க், அந்த வாக்காலொளி நீங்க சத்தம் போட்டதுக்கு புறகு போனே பண்ணகாணமுங்க்.

அ.ம : அந்த புள்ள முடையப்பா..புடிசாதம் புடிச்சது.இந்த் நாயும் கேக்கமாட்டேன். @%$ளி எல்லாம் பட்டதான் புத்தி வரும்.

ஆ.ம: அண்ணா நம்ம அம்முசி வேற போனு வேணும்னு கேக்குதுங்க, நோக்கிய வாங்க்லாமுங்க்லா,இல்ல ஆப்பிள் வாங்கலாமுங்க்ளா?

 அ.ம: அட இன்னும் ஒரு ரெண்டு மாசம் பொரு ஆப்பிள் 6 உடரானாமாஅப்ப ஒண்ணா வாங்கிபோடலாம்..எனக்கும் ஒண்ணு வாங்கோணும். இந்த சாம்சங் S4 நம்முளுக்கு ஆபரேட் பண்ணதெரியல


ஆ.ம : அண்ணோவ், அவன் வேற லைன்ல கூப்ட்ராநுங்க்,கான்பரன்ஸ் போடறதுங்க்ளா..

அ.ம : எடு , அவன இன்னிக்கு இரண்ட்ல ஒண்ணு கேக்கோனும்

 ஆ.ம : சொல்றா குப்புசாமி, எப்புடி இருக்கற, பாரு நம்ம அண்ணனும் லைன்ல இருக்கராரு பேசு..

குப்பு : ம்ம், எப்பிடிடா இருக்கறீங்க?

அ.ம : நாங்கெல்லாம் நால்லாதன் இருக்கறோம்..உனக்கு என்னப்பா பிரச்சனை...?

குப்பு : நீ பேசாத நாயே..நீ மூடு.

அ.ம : ம், அப்பறம் ஆறுமுகன்  மவனே,பொழுதொட என்ன சாராயம்?

ஆ.ம :  அதுதானுங்க் "சாணி வால்க்கர்"..நீங்க?

அ.ம : "சிவாஸ் ரீகல் ", அப்றம்  நான் அனுப்புணனே "மிட் நைட் சில்ட்ரன்" நம்ம சல்மான் ருஷிடி எழுதுனது படுச்சுயா.?

ஆ.ம : இல்லீங்க்,இப்பதானுங்க் "டேல் ஆஃப் டூ சிட்டேஸ்" அரவாசி படுசுச்சு முடுச்சுருகரனுங்க்.நீங்க எந்த புக் படிக்கரீங்க்?

குப்பு : டேய், நாய்ய்களா..

அ.ம : நேத்து தானப்பா "இன்ஃபேர்னோ " வாங்குன படிக்கொனும், ஆமா நீ அந்த "பூனம் போண்டா" நடுச்சா நாஸா படம் பாத்யா??

குப்பு : டேய், கேணை ######..###களா..

ஆ.ம : ஆமங்க்ணா..அது ஏனோ எனக்கு புடிக்கலீங்க்..வர வர ஹிந்தி படங்களே புடிக்க மாட்டீதுங்க்..ஏதாவது நல்ல ஆலிவூட் படம் தமில இருந்தா சொல்லுங்க் பாக்கலாம்...

குப்பு: நாசமா போய் தொலைங்கடா கேணைக்####ளா, @$%##

அ.ம : டேய், டேய், அட குப்பு என்னணு சொல்லப்பா..எதுக்கு இத்தன கோவம்..

ஆ.ம: அண்ணா அவன் அப்பவே கட் பண்ணிட்டானுங்க்....

அ.ம : அப்பிடியா..சேரி,சேரி..நான்போயி மேலுக்கு தண்ணீ ஊத்திட்டு, சாரயத்த குடிச்சுபூட்டு,அப்பாரமா ரிங் உடுட்டுமா.?

ஆ.ம : சேரிங்நோவ்...


Saturday, March 9, 2013

Beautiful Eyes...!!! - My first story...



Beautiful Eyes

               She is pretty & her eyes were prettier while she covers her faces with the long cloth to protect her beautiful face from sunlight, when she comes in her scooty. I never saw wonderful eyes! I waited so many times at the gate to see those eyes. 
             I had spoken with her only in few times in last nine months. Whenever she calls I never transfer her call to my team, apart from her call I transfer every calls to my team. I ordered my juniors if she calls transfer that to me.  On these days if she calls I am asking a lot to her, she also asking me a lot. After ending her call I am thinking you idiot why finished that so quickly! 
                  She always comes with uniform that never displayed her beauty. On that dress she looks like a school kid who doesn’t know to choose cloths. I will think why the hell these guys have dress code… idiots…
Over few days she is smiling whenever we crossed each other, me too… after she crossed me…
Few days back at lunch time I saw she is going & I left the lunch & ran behind her, she noticed me & smiled at me, I didn’t replied her & went to my room quickly & watched her through windows until she passed my block, she covered her face with her left hand because of too much heat …
Next day I had some work to do at her office I went her office & notice her, she wasn’t there but I saw a hand bag & I did my work  too slowly to see her , after  I  finished my work  I saw  somebody was sitting on her seat….

I left the office so quickly and searched her scooty at parking…..


Naveen…

 I wrote this on three years back..it was my first story.Never satisfied with the way I wrote this...

Copyright @ 2013 Naveen Scribes.